சென்னையில் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய சிறந்த இடம்..!

Video Description

தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய சிறந்த இடம் தீபாவளி கொண்டாட்டம் வந்துவிட்டாலே நமது சம்பளத்தில் கூடுதலான பணம் கிடைக்கும் இதைத் தவிர்த்து நமக்கு விடுமுறை நாட்களும் கிடைக்கிறது இதை பயன்படுத்தி நாம் தீபாவளிக்கு பல இடங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வருவோம் அதில் சென்னையில் நாம் பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்குவதற்கான சிறந்த இடம் என்னவென்று இந்த காணொளியில் பார்க்கலாம். சென்னையில் ஆடைகளை வாங்குவதற்கான சிறந்த இடம் பல நூற்றாண்டுகளாகவே முதலில் இருப்பது டி நகர் ரங்கநாதன் தெரு தான் இந்த தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் என முன்னணி துணிக்கடைகள் இருக்கின்றன இதனால் நமக்கு தேவையான ஆடைகள் மட்டும் வீட்டு பொருட்கள் அனைத்தும் இந்த தெருவில் கிடைக்கும் இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சவுகார்பேட்டை, மார்வாடி கலாச்சாரப்படி கிடைக்கும் அனைத்து ஆடைகளும் வட இந்திய ஆடைகளும் மற்றும் தென்னிந்திய ஆடைகள் என எல்லாவிதமான ஆடைகளும் சவுகார்பேட்டையில் மலிவான விலையில் கிடைக்கின்றன இதைத் தவிர்த்து இங்கு வாங்க சென்றால் அருகில் உள்ள ஏராளமான உணவகத்தில் ருசித்து வரலாம் மூன்றாவது இடத்தில் இருப்பது பாண்டிபஜார் டி நகருக்கு மிக அருகில் இருப்பதால் இங்கு ஏராளமான கடைகள் அமைந்திருக்கின்றன ஆனால் இங்கு உயர்தர பொருட்கள் அதிகளவில் கிடைக்கிறது அடுத்து அடையார், இங்கு ஆடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கின்றன இதை தவிர்த்து சென்னையில் பல இடங்களில் மால் வசதிகள் இருக்கின்றன உதாரணத்திற்கு வேளச்சேரியில் இருக்கும் பீனிக்ஸ் மால் அடுத்து ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னை சுற்றி பல இடங்களில் இது போன்ற வசதிகள் இருப்பதினால் நாம் எங்கு சென்றாலும் பொருட்களை வாங்கி வரலாம். சென்னை / பொருட்கள் / ஆடைகள் / வாங்க / சிறந்த / இடம் / டி நகர் / பாண்டி பஜார் / அடையார் / மால்ஸ்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.