பாத்திரங்கள் வாங்க சிறந்த இடம் செட்டி தெரு..!

Video Description

பாத்திரங்கள் வாங்கும் சிறந்த இடம் ஜி என் செட்டி தெரு நம் வீட்டு உபயோகத்திற்கு நிச்சயம் பாத்திர பண்டங்கள் தேவைப்படும் இவை அனைத்தும் நம் வீட்டு அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி விடுகிறோம் ஆனால் இதன் தரமும் விலையும் நாம் எதிர்பார்த்ததைப் போல் இருக்காது இப்படி ஏமாற்றம் அடைபவர்கள் பாரிசில் இருக்கும் ஜி என் செட்டி சாலையில் அமைந்திருக்கும் கடைகள் முழுக்க மொத்த வியாபாரம் பாத்திரங்கள் கிடைக்கின்றன இங்கு வீட்டிற்கு தேவையான பாத்திரத்தை தவிர்த்து பூஜைக்கு தேவையான பொருட்கள், அலுமினியம், பித்தளை, சில்வர், செராமிக் என அனைத்துவிதமான உலோகப் பாத்திரங்கள் இங்கு கிடைக்கின்றன நீங்கள் சீர்வரிசை பாத்திரம் கொடுக்க வேண்டுமென்றால் இங்கு வந்து வாங்கினால் நிச்சயம் 50 சதவீதம் உங்கள் பணத்தை சேமிக்கலாம் இதை தவிர்த்து புதிதாக உணவகம் திறந்திருப்பவர்கள் அல்லது கடை அமைப்பதற்க்கு இங்குதான் பாத்திரத்தை வாங்குகிறார்கள் ஏனென்றால் இங்கு ஐந்து ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன அது மட்டுமில்லாமல் நம் உணவகத்தின் தோற்றத்திற்கு ஏற்றார்போல் புதுவிதமான வண்ணமயமான பொருட்களை இங்கு வந்து வாங்கி செல்லலாம் குக்கர் மிக்ஸி கிரைண்டர் போன்றவகைகளும் இங்கே கிடைக்கின்றன இங்கு மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது இங்கு வரும் ஒரு வாடிக்கையாளர் கூறுவது என்னவென்றால் விழுப்புரத்தில் இருக்கும் இவருக்கு பெருநகரம் என்பது பாண்டிச்சேரி தான் ஆனால் சென்னையில் கிடைப்பதைவிட அங்கு இரு மடங்கு விலை இருப்பதினால் சென்னைக்கு வந்து இந்த இடத்தில் பாத்திரங்களை வாங்கி செல்கிறார் இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல பகுதிகளில் இருப்பவர்கள் இங்கு தான் வந்து பாத்திரங்களை வாங்கி செல்கிறார்கள் ஏனென்றால் இங்கிருந்து எங்குவேண்டுமானாலும் செல்வதற்கான வாகன வசதிகள் இருக்கின்றன இங்கு தரமான பொருட்கள் கிடைப்பதினால் இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று பிற சிறுநகரங்களில் கடை அமைத்து தொழில் தொடங்குகிறார்கள் அதில் வெற்றியும் அடைகிறார்கள் எனவே இந்த சாலையில் நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான எந்த பொருள் வேண்டுமானாலும் மிக மலிவான விலையில் வாங்கி செல்லலாம். ஜி என் செட்டி / சாலை / பாத்திரங்கள் / மலிவு / விலை / மொத்த / வியாபாரம் / சில்லரை / வியாபாரம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.