வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

Video Description

வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது? கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு வருக்கும் அவசியமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி அவசியமான ஒன்று. ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே அந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள் பற்றி இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். படிக்கக்கூடிய அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய ஜன்னல்கள் அமைக்க வேண்டும் அப்போது காற்றோட்டம் நன்றாக கிடைக்கும் தூய காற்று கிடைக்கும் போது அவர்களின் உடல் நிலையும் மன நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பது மிகவும் நன்று இந்த அறையில் கனமான பொருட்களை நாம் வைக்கவே கூடாது. அதுபோலவே இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி பரண்கள் போன்றவற்றை அமைக்கக்கூடாது. குழந்தைகளுக்கான நூலகத்தை மேற்கு திசையில் அமைப்பது சிறந்தது. அதேபோல் கிழக்கு நோக்கியபடி நாற்காலியைப் போட்டு அமர்ந்து படிக்க வேண்டும். வடக்கு நோக்கி நாற்காலியை போட்டு படிக்கலாம். ஆனால் தெற்கு திசைக்கு ஒட்டினாற்போல் நாற்காலி இருக்கவேண்டும். அடுத்தபடியாக வடகிழக்கு கிழக்கு வடமேற்கு திசையில் அமையும்படி படிக்கும் அறையை அமைக்கலாம். அலமாரிகள் மேற்கு திசையிலும் சுவருக்கு அருகில் இருக்க வேண்டும் .இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேண்டும் என்றால் அதில் இளம் மஞ்சள் இளம் பச்சை மஞ்சள் நிறத்தில் ஏதாவது ஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி மீன் தொட்டி ஆகியவற்றை வைக்கக் கூடாது. இன்றைக்கு சூரிய வெளிச்சம் நேராக வந்து விடக்கூடாது. ஒரு வீட்டின் படிப்பறை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பான ஞானம் கிடைக்கும். மேல் சொன்ன அனைத்தையுமே நீங்கள் செய்து பாருங்கள் உங்கள் குழந்தைக்கு படிப்பு மடமடவென வந்து விடும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.