ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உணவு முறைகள் என்ன...?

Video Description

குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்கும் முன் என்னென்ன உணவுகளை எப் போது கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுதல் மிகவும் அவசியம். திட உணவு கொடுக்கும் போது மென்மையான காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். அந்த உணவின் சுவை பிடிக்கும் வரையில் அவர்கள் அதனை சாப்பிடுவது மிகவும் கடினம் .எனவே அதன் சுவையில் பழக்கப்படுத்தி பின் மிகவும் சிறந்தது குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் தான் விரும்பி உண்பார்கள் அதனால் பால் ராகி கூழுடன் கரும்பு சக்கரை சிறிதளவு கலந்து ஊட்டலாம். முதல் முறையாக உணவு கொடுக்கும் போது ஒரு டேபிள்ஸ்பூன் கொடுக்க வேண்டும் இரண்டாவது நாள் 2 டேபிள்ஸ்பூன் மூன்றாவது நாள் 3 டேபிள்ஸ்பூன் என்று சிறிதளவாக அதிகரித்து வரலாம். திட உணவுகளை கொடுக்கும் அதற்கு முன்பு பழங்களை மசித்துக் அதன் சுவையை குழந்தைக்கு பழக்கப்படுத்தி விடுவது மிகவும் சிறந்தது பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் மற்றும் பருப்பு வகைகளை கொடுக்கும் முன் மருத்துவரை ஆலோசித்து ஆலோசனை கேட்ட பின் கொடுப்பது சாலச் சிறந்தது சில உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால் இதை நான் பரிந்துரை செய்கிறோம் காய்கறிகள் மற்றும் இறைச்சி குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி அடைய செய்யும் வலிமையாகவும் உதவும் இறைச்சியில் நிறைந்திருக்கும் புரதம் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது காய்கறிகளும் இறைச்சியும் வெவ்வேறாக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் வெவ்வேறு பாகங்களை வளர்ச்சி அடைய உதவியது குழந்தைகளுக்கு கால்சியம் சத்துள்ள பொருட்களை அதிகளவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் உடம்பில் உள்ள எலும்புகள் வலுவடைந்து பற்கள் சீராகவும் சிறப்பாகவும் அமையும் குழந்தைகளின் எலும்பு மண்டலம் நன்கு வளர்ச்சி அடையும் ஆகவே குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் குழந்தைகளின் உடலுக்கு எவ்வித நோயும் ஏற்படாது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.