இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கான சிறந்த உணவு இது தான்..!

Video Description

நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணி சுமையை அதிகரிக்கக் கூடாது இந்த தவற்றை செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதனால் பாதிப்புகள் ஏற்படுவது உறுதி. என்ன செய்ய எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது என்பவர்களுக்கு ஒரே வழி எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ அதைப் போல் இரவு உணவையும் சூழ்நிலைக்கு ஏற்றபடி அமைத்துக்கொண்டு 9 மணிக்குள் முடித்து விடுவதுதான் மிகவும் நல்லது. ஆவியில் வேகவைத்த உணவு களையும் செரிமானத்துக்கு பிரச்சினை தராத மென்மையான உணவுகளையும் இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லது இட்லி இடியாப்பம் தோசை போன்ற உணவுகளை சாப்பிடலாம் எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்கள் காரமான குழம்பு வகைகள் துரித உணவகங்கள் இரவு உணவில் வேண்டாம். துரித உணவுகள் செரிமானத்திற்கு பிரச்சனை உண்டாக்குவதுடன் ஆழ்ந்த உறக்கத்தையும் கெடுத்து விடும் ஆனால் இன்றைக்கு பெரும்பாலான இரவு நேரங்களில் பார்டிகளில் செரிமானம் கடினமான உணவு ரகங்கள்தான் பரிமாறப்படுகின்றது. இரவு நேரப் பார்ட்டி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை இரவில் சாப்பிட்டால் விஷ உணவு குறி குணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் சுரைக்காய் புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவு நேரத்தில் ஒதுக்கிவிட வேண்டும். இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது சரியாக செரிமானம் ஆகாத உணவு கள் வயிற்றுக்குள் எழுப்பும் கடமுடா ஓசைகளும் தடைகளும் நம்மைத் தட்டி எடுத்து விடக்கூடாது எனவே எண்ணெய் அதிகம் நிறைந்த பொரித்த வறுத்த உணவுகள் நெஞ்செரிச்சல் உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும் குறிப்பாக அசைவ உணவுகளுக்கு இரவில் இடம் தரவே கூடாது அசைவ உணவுகள் செரிமானம் அடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் மறுநாள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவரைப் பிஞ்சு அத்திக்காய் பால் துவரம்பருப்பு முருங்கை பிஞ்சு தூதுவளை போன்றவற்றை இரவு நேரத்தில் நாம் சாப்பிடலாம் கீரை வகைகள் தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம் கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம் சளி இருமல் தொந்தரவு களுடன் ஒவ்வாமல் சார்ந்த குணங்களும் கைகள் கோத்துக் கொள்ளும். இரவு நேரத்தில் காய்கறிகள் அடங்கிய சூப் வகைகள் மிளகு மஞ்சள் சேர்ந்த பால் போன்றவை உடலுக்கு உகந்ததாக அமையும். நேரம் கிடைப்பது இரவில் மட்டும்தான் என வயிறு முட்டும் அளவுக்கு தொண்டை எட்டும் வகைகளும் இரவு உணவை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்தால் எண்ணற்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். சித்தர்களின் கூற்றுப்படி காலை நேரத்தில் உணவை ராஜவை போலவும் மதிய நேரத்தில் பாதி உணவையும் இரவு நேரத்தில் ஒரு பிச்சைக்காரனைப் போலவும் உண்டாலே போதும் நமது உடலை எந்த நோயும் தாக்காது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.