அத்திப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.!!

Video Description

---------- Forwarded message --------- From: brindha iyer <dsbrindha@gmail.com> Date: Mon, Nov 11, 2019 at 4:54 PM Subject: அத்திபழம் நன்மைகள் To: Dhanushya Sivakumar <dhanushya.s@homescreennetwork.com> அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள். அத்தி மர வகையைச் சார்ந்தது நாட்டு அத்தி , வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பலவகை அத்திமரங்கள் உண்டு. அத்தி அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இந்த மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். இதில் புரதம் 750 மில்லி கிராம் பொட்டாசியம் 242 மில்லி கிராம் கால்சியம் 35 மில்லிகிராம் கொழுப்பு 300 மில்லி கிராம் உள்ளது. அத்திப்பாலை வாய்ப்புண் உள்ள பகுதிகளில் தடவினால் வாய்ப்புண் ஆறும் மலச்சிக்கலைத் தீர்க்கும் ரத்தவிருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும் ஆற்றல் உண்டு. ஆண்மையை பெருக்கும். தினசரி 2 அத்திப்பழத்தை சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனடையும் .மலச்சிக்கலை நீக்கும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கும். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் வெண் குஷ்டம் தோலின் நிறமாற்றம் குணமாகும். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அளவற்ற ஆற்றல் பெறலாம். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்ற வைக்கிறது சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றி சிறுநீரை பெருக்குகிறது .பெருங்குடலில் இறுகிக் காணப்படும் கழிவுப்பொருட்களை பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாக உருவாக்குகிறது. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் அதை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி அத்திப் பழத்துக்கு உண்டு. வாய்ப்புண் ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். அத்தி மரத்தின் பட்டையை இரவில் ஊறவைத்து காலையில் குடிநீராக குடிக்க வாத நோய் மூட்டு வலிகள் குணப்படும் அழுகிய புண்களைக் கழுவும் லோசனாக கூட இதை பயன்படுத்தலாம். கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ நிக்கோடினிக் அமிலம் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப்பழத்தில் அதிகளவு காணப்படுகிறது. .அதிலுள்ள தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.