திருநீறு, குங்குமம் இட்டு கொள்ள காரணம் என்ன..? - ஒர் அறிவியல் பார

Video Description

நம் உடலில் உள்ள நாடி, நரம்புகள் அனைத்தும் மூளையுடன் இணைந்துள்ளன. நமது உடலில் உள்ள எண்ணற்ற நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகவே செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக சூடாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் உஷ்ணத்தில் இருந்து குளிரச் செய்வதற்கே நாம் நெற்றியில் சந்தனம் பூசுகிறோம். தலையில் ஏற்படும் வியர்வை தலையில் கொட்டும் பனித்துளிகள், மழைத்துளிகள் மற்றும் தண்ணீர் ஆகியவை நம் தலையில் கெட்டிப்பட்டு தலைப்பகுதியில் தங்கிவிடும். விபூதி இதனால் தலைவலி, சைனஸ், தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். மஞ்சள் நெற்றிப் பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே நாம் மஞ்சள் பூசும் போது அந்த கிருமித்தொற்று அழிந்துவிடும். மஞ்சளானது ஒரு கிருமி நாசினியாகும். குங்குமம் மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவது குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.