பிரகாசமான முகத்தை பெற அற்புதமான அழகு குறிப்புகள்...!!

Video Description

தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைய கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து உடம்பில் பூசி ஒரு மணிநேரம் வைத்த பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள் மறையும். பப்பாளி பழ சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சில நிமிடம் சென்ற பின் நீரால் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும் .நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும். சிறிதளவு பன்னீர் ,பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தில் வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும் .முகத்தில் உள்ள துவாரங்கள் போக ஒரு குச்சியில் துணியை சுற்றி அதை எலுமிச்சம்பழச் சாற்றில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும். உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பழைய பிரஷ்ஷால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வெயில் படும் இடங்களில் உள்ள கருமை நிறம் போக எலுமிச்சை சாறு மற்றும் பால் இவற்றை கலந்து தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கருமை நிறம் மாறி வெள்ளையாக காட்சியளிக்கும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும் முகமும் பொலிவு பெறும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும் தினமும் இவ்வாறு செய்வதால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் காட்சியளிக்கும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் அது முகத்தின் அழகை கூட்டும். வேப்பிலை ,புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி கொள்ள வேண்டும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் அப்படியே அந்த முகத்தை வைத்திருக்க வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகம் பளபளப்புடன் இருக்கும். வெயில் குரு கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.