கணினிக்கு முன்னால் வேலை செய்யும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்..!

Video Description

வேலைக்கு செல்லும் பெண்கள் முக ஆரோக்கியத்திற்கு இப்போது இருக்கும் காலத்தில் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள் அதிலும் பெரும்பாலான பெண்கள் கணினி முன் அமர்ந்து பல மணி நேரமாக அதிலேயே வேலை செய்கிறார்கள் இதனால் அவர்கள் கண்கள் மற்றும் அந்த வெளிச்சத்தில் அவர்கள் முகமும் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன எனவே இவர்கள் தங்களது முகத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம் இவர்கள் வெயில் படாமல் இருப்பதற்காக பயன்படுத்தும் சூரிய எதிர்ப்பு குழைமத்தை நம் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும் இதனால் கணினியில் இருந்து வெளியேறும் வெளிச்சம் நம் முகத்தை தாக்காது பின்பு நாம் அவ்வப்போது நம் முக அழகை மேம்படுத்துவதற்காக சிறிது நேரம் இடைவெளி எடுக்க வேண்டும் அப்போது நம் முகத்தை கண்ணாடியில் பார்த்து எது தேவை என்பதை முடிவுசெய்து நம் முகத்தை அதற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டு மீண்டும் வேலை செய்ய வேண்டும் இவர்கள் முகத்தின் நிறம் மங்குவதை தவிர்க்க சிறந்த அழகு சாதனங்களை பயன்படுத்த வேண்டும் அதுமட்டுமல்லாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் கண்களை சுற்றி கருவளையம் மற்றும் முகத்தில் சுருக்கங்கள் அதிகளவு ஏற்படுவதுதான் இவர்களின் பெரிய பிரச்சனையாக இருக்கிறது இதனால் இவர்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் இது அவர்கள் வயதாகும்போதே அவர்களின் முகம் வயதாவதை தடுக்கும் பின்பு இவர்கள் தங்கள் முகத்தை அவ்வப்போது கைகளால் பிடித்துவிட வேண்டும் அலுவலகத்தில் ஐஸ் கட்டிகள் இருந்தால் அதை வைத்து தடவுவது மிகவும் நல்லது கடைசியாக நம் கண்களுக்கு பயன்படுத்தும் வெள்ளிரிக்காய் பயன்படுத்த வேண்டும் இதனால் தொய்வடைந்த கண்கள் சுறுசுறுப்பாகும். வேலைக்கு / செல்லும் / பெண்கள் / கணினி / வெளிச்சம் / முகம் / சுருக்கம் / கருவளையம் / பாதிப்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.