பெண்களுக்கான கண்கவரும் ஆடைகள் பெசன்ட் நகரில்..!

Video Description

ஆணி டெய்லர் ஷாப் பெண்களுக்கு எப்போதும் இரண்டு வகையான ஆடைகள் பிடிக்கும் ஒன்று உடனடியாக போடக்கூடிய ஆடைகள் மற்றொன்று அவர்களுக்கு விருப்பமான நிறத்தில் விருப்பமான வடிவத்தில் இருக்கும் ஆடை துணியை எடுத்து அவர்களுக்கு ஏற்றார் போல் தைத்துக்கொள்வார்கள் இப்படி இருப்பவர்களுக்காகவே ஏராளமான உடையை தைத்து ஒரு கடையில் வைத்திருந்தால் எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு கடைதான் ஆணி டெய்லர் ஷாப் இது வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு சிறிய கடை போல்தான் தெரியும் ஆனால் இதன் உள்கட்டமைப்பு மிகவும் அழகாக இருக்கும் இதை தவிர்த்து இங்கு இருக்கும் அனைத்து உடைகளும் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும் இந்த உடையை வைத்து நீங்கள் ஆடை அணிவகுப்பில் கூட கலந்து கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்குமாம் இப்படி இருக்கும் இந்த உடைகளில் ஆரம்ப விலை 899 முதல் 5 ஆயிரம் வரை என்கிறார்கள் இதன் மேல் போடப்படும் பூக்கள் மணிகள் அனைத்தும் இவர்கள் கைகளால் செய்யப்படும் ஒரு கலையாகும் இந்த கடை உரிமையாளர் திருச்சியை சேர்ந்தவர் என்பதனால் இங்கு இருக்கும் அனைத்து ஆடைகளையும் திருச்சியிலிருந்து இங்கு அனுப்பி வைக்கிறார் என்று இந்த கடையில் வேலை செய்பவர்கள் கூறினார்கள் இவர்கள் தெய்க்கும் அனைத்தும் இவரின் சொந்த வடிவமைப்பாகும் நாம் ஏதாவது ஒரு துணியை எடுத்து கொண்டு தைக்க கொடுத்தால் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் என்று கூறுகிறார்கள் சாதாரண ஒரு சுடிதார் தைப்பதற்கு 300 ரூபாய் ஆகும் எனவே நீங்கள் கல்யாணம் மற்றும் ஏதாவது வீட்டு பண்டிகைகளுக்கு துணிகளை வாங்க வேண்டும் என்றால் இங்கு வாங்கினால் நிச்சயம் உங்கள் தோற்றத்தை இந்த ஆடை பிரம்மாண்டமாக காட்டும் ஆனால் பார்ப்பவர்களுக்கு இதன் விலை என்னமோ 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று நினைப்பார்கள் எனவே இப்படி உங்களை சுற்றி இருப்பவர்களை ஏமாற்றுவதற்காக இங்கு மலிவான விலையில் கிடைக்கும் ஆடைகளை அணிவித்து அட்டகாச படுத்துங்கள். ஆடை / அலங்காரம் / அணிவகுப்பு / பிரம்மாண்டம் / புதிய / ரகம் / திருச்சி / தையல் / ஆணி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.