உடலின் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ் வாங்க அடையாறு வாங்க

Video Description

அங்கங்கே உருவெடுத்த வரும் கற்றாழை பழரசம் கலாச்சாரம் உலகம் வெப்பமயமாதல் நாம் அன்றாடம் செய்யும் வேலை கூட அதிக அளவில் செய்வது போல் உணர வைக்கிறது. இந்த சுற்றுப்புற சூழலில் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்க நாம் அதிகமான குடிநீர் மட்டும் அருந்தாமல் இளநீர், கரும்பு பழரசம், போன்ற அனைத்தையும் பார்க்கும் இடத்திலெல்லாம் குடித்து வருகிறோம். என்னதான் குடித்தாலும் நம்முடைய உடம்பிற்கு குளிர்ச்சி ஓரளவுக்கு தான் தருகிறது. இதுக்கு எல்லாம் முட்டுக்கட்டை வைப்பது போல் இப்போது பணநுங்கு, பனங்காய் மற்றும் கற்றாழை பழரசம் போன்றவைகள் எல்லாம் கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு வந்தடைந்திருக்கிறது. இந்த வருகையால் அங்காங்கே கற்றாழை பழரசம் விற்கத் தொடங்கி விட்டார்கள் அதிலும் மிகவும் முக்கியமான இடங்களிலும் இது கிடைக்கின்றது. வசதிபடைத்தவர்கள் இதன் அருமையை கண்டு இதுபோன்ற பழரசத்தை வந்து வாங்கி அருந்துகிறார்கள். கற்றாழை பழரசம் உண்பதற்கு சிரிது தெகட்டல் இருந்தாலும் உடலுக்கு நல்லது என்பதால் அதை அருந்துகிறார்கள். அதில் சற்று மோரைக் கலந்து குடிப்பதனால் அதில் இருக்கும் சிறு கசப்பு கூட போக்கி மேலும் குடிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை இதைக் குடித்தால் போதும் மூன்றே வாரங்களில் உடல் சூடு தணிந்து சுறுசுறுப்பாக இருப்பது நம்மால் காண முடியும் என்கிறார்கள் இதை செய்துவருபவர்கள். இதை மற்ற வெளி கிராமப்புறங்களிலிருந்து வாகனம் மூலமாக ஏற்றிக்கொண்டு முக்கியமான இடங்களில் வந்து சேர்கிறது. இதன் எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் வாகனம் மூலமாக இதைக் கொண்டு வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் கேழ்வரகு குழ் கலாச்சாரம் சென்னை வந்தடைந்தது இப்போது கற்றாழை பழரசம் வந்திருக்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை, உணவுகளில் மகத்துவங்கள் நாம் அறிந்திருக்கிறோம். 20 ரூபாய் / பழரசம் / கற்றாழை / உடல் சூட்டை தணிக்க / அடையார் / சென்னை /கிராமம் / வாகனம் மூலம் / நல்ல வரவேற்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.