மதுரை மக்களின் தாகத்தை தீர்த்த வைகை எக்ஸ்பிரஸ்..!

Video Description

நம்ம வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை ஆரம்பித்து 42 வருஷம் ஆச்சு. இதனால் நம்ம வைகை ரயிலுக்கு கேக்வெட்டி, பூமால போட்டு, உற்சாகமாக பிறந்த நாள் கொண்டாடி நம்ம ரயில்வே அதிகாரிங்க அசத்திபுட்டாங்கல்ல.. கேட்கவே ஆச்சர்யமாதாங்க இன்னமும் இருக்கு.. இப்பத்தான் அதிவேக ஆம்னி பஸ்கள் எல்லாம் 8மணி நேரத்தில் சென்னைக்கு போய் சேருது. அதுவும் செங்கல்பட்டு டூ பெருங்களத்தூர் டிராபிக் ஆச்சுன்னா கஷ்டம் தான். ஆனால் 42 வருஷத்துக்கு முன்னாடியே நம்ம வைகை எக்ஸிபிரஸ் 8மணி நேரத்துக்கு முன்னாடிய மதுரையில இருந்து சென்னைக்கு போயிருக்கு.. இந்த ரயில் தான் நம்ம ஊர் மக்களுக்கு அந்த காலத்துல மலிவு விலை விமானம், ஏரோப்பிளானில் சொய்யிங்ணு போக வசதி இல்லாத ஏழைகளின் (ரதம்) விமானம் தாங்க நம்மஊர் வைகை எக்ஸ்பிரஸ். 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மதுரை சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதுதாங்க நம்ம மதுரை மாவட்டத்தோட முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.. மதுரை மக்களின் தாகம் தீர்க்கும் வைகை நதியின் பெயரை வைத்ததாலே என்னவே இன்று வரை மதுரை மக்களின் பயண தாகத்தை இடைவிடாமல் தீர்த்து வந்துகிட்டு இருக்கு..

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.