இலங்கை தமிழ் நாகரிகத்தின் துவக்கம்.. 25,000 ஆண்டு பழைய ஆவணம்!

Video Description

இந்தியாவின் தென்கீழ் கரையை ஒட்டியிருக்கும் ஒரு அழகிய தீவு தான் இலங்கை. இன்று தனிநாடாக இருந்தால் பல ஆயிரம் வருடத்திற்கு முன் அது குமரி கண்டம் தமிழ் சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது சிங்களவர்களின் பூமி என்று கூறப்படுகின்றது. இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் சான்றுகள் கிடைத்தாலும், அவற்றை மூடி மறைப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. எவ்வளவுதான் மறைக்க முற்பட்டாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். அந்த வகையில் ஒரு புகைப்படம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சுமார் 25,000 ஆண்டுகளுக்க முற்பட்ட இலங்கை எப்படி இருந்தது? எந்த இடங்களுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருந்தது? என்ன மொழி நடைமுறையில் உள்ளது? இலங்கையில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு இந்த புகைப்படம் பதிலாக உள்ளது. இதுவரை யாரும் அறிந்திடாத பல ஆச்சரியங்கள் இந்த புகைப்படத்தில் காணப்படுகின்றன. 25,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.