20 ரூபாய் முதல் பளிங்கு கற்களாலான ஆபரணங்கள் பெசன்ட் நகரில்..!

Video Description

அழகூட்டும் பளிங்கு கற்கள் பெண்களுக்கு பிடித்தமானது ஆபரணங்கள். ஆபரணங்கள் என்றாலே தங்கம் வைரம் என்று தான் கூறுவார்கள் ஆனால் அவர்களுக்கு இதை தவிர்த்து மிகவும் பிடித்த பொருட்கள் பளிங்கு கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள்தான் ஏன்என்றால் இது மலிவு விலை மற்றும் பல வண்ணங்களில் கிடைப்பதனால் இது இவர்களை அதிக அளவில் கவர்கிறது இப்படி பளிங்கு கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை நேசிப்பவர்கள் பெசன்ட் நகர் செகண்ட் அவென்யூ சாலையில் இருக்கும் ஒரு சிறிய பளிங்குக் கற்கள் விற்கும் கடைக்கு வந்து பாருங்கள் ஏனென்றால் இங்கே ஏராளமான கற்களை கொண்டு நமக்கு பிடித்த அளவு மற்றும் நிறத்திற்கு இங்கே ஆபரணங்களை செய்து தருகிறார்கள் இது மட்டுமல்லாமல் நம்மிடமிருக்கும் ஆடை நிறத்திற்கு ஏற்றார் போல் இதை அவர்களே வடிவமைத்து நமக்குத் தருகிறார்கள் நீங்கள் இது போன்ற விஷயங்களில் அதிக அளவு கற்பனை சக்தி கொண்டவர்கள் என்றால் உங்களுக்கு விருப்பமான வண்ண கற்களைக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான ஆபரணத்தை செய்துகொள்ளலாம் இந்த கற்கள் அனைத்தும் ராஜஸ்தானிலிருந்து இறக்குமதி ஆகிறது என்று இந்த கடையின் உரிமையாளர் நிர்மலா கூறினார் இங்கு இருக்கும் ஒரு வாடிக்கையாளர் கூறுவது என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த இடத்திற்கு வந்து பலமுறை பல ஆபரணங்களை வாங்கியுள்ளார் இதை தவிர்த்து நவராத்திரி மற்றும் வீட்டில் நடக்கும் பண்டிகைகளில் அவர்களுக்கு ஆடை கொடுப்பதற்கு பதிலாக இதுபோன்ற ஆபரணத்தை கொடுத்து வருகிறாராம் ஏனென்றால் இது பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருட்கள் மாதிரி தெரியும் அது மட்டும் இல்லாமல் இது பெண்களுக்கு பிடித்த ஒரு பொருள் ஆகும் ஆனால் உண்மையில் இந்த பளிங்கு கற்களில் விலை மிகக் குறைவாகும் நம் கையில் போடும் சிறிய ரக வளையல்கள் வெறும் 20 ரூபாயிலிருந்து தொடங்குகிறது எனவே பெண்கள் அதிகளவு விரும்பக்கூடிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் நிச்சயம் இங்கு ஏராளமானோர் வருவார்கள் எனவே அவர்களுக்கு முன் நீங்கள் முந்திக்கொண்டு உங்களுக்கு பிடித்த ஆபரணத்தை எடுத்துச் செல்லுங்கள். பெண்கள் / பளிங்கு / கற்கள் / ஆபரணம் / ராஜஸ்தான் / கண்ணாடி / 20 ரூபாய்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.