யோகா செய்வதால் ஏற்படும் உயரிய மாற்றங்கள்!

  • by
yoga poses which relieves your stress

யோகா என்ற சொல்லுக்கு இணைதல் என்று பொருள். யோகா இந்தியாவில் உள்ள 6 தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. இந்து தத்துவத்தின் படி யோகா என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

யோகாவின் நன்மைகள் :

  • ஞாபக சக்தி மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது. உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது.
  • மன அழுத்தம், படபடப்பு ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.
    ஆழ்ந்து உணரும் ஆனந்தம், அமைதி, நிறைவை வழங்கிடும்.
  • ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
  • அனைவருடனும் இணைந்து செயல்படும் திறனையும், பழகும் முறையையும் மேம்படுத்துகிறது.
  • நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

யோக அங்கங்கள் :

  • யோகத்தில் மொத்தம் எட்டு அங்கங்கள் இருக்கின்றது. அதில் இமயம், நியமம், ஆசனம், தாராணை, தியானம், சமாதி, பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்று எட்டு அங்கங்கள் உள்ளது இவற்றில் இமயத்தில்-மிதவாதம், சாரமற்ற தன்மை, பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .

யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள் :

  • மன அழுத்தம், பயம் மற்றும் படபடப்பிலிருந்து விடுவிக்கிறது
    நாட்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், சர்க்கரை நோய் முதுகுவலி போன்றவற்றிற்கு சிறந்த பலனளிக்கிறது.
  • உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது.
  • இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது
  • தகவல் பரிமாற்றம் மற்றும் பிறருடன் பழகுவதில் மேம்பட்ட நிலை
    மனத்தெளிவு, உணர்ச்சிகளில் சமநிலை மற்றும் உற்பத்தி திறன் மேம்படுகிறது
  • நாள் முழுவதும் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது. தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது
  • அஜீரண கோளாறுகள் சீரடைகிறது.
  • தூங்கும் முறை – ஷாம்பவி பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தவர்களிடம், தூக்கத்தில் மூளையின் ஓய்வு நிலை படிவம் மிகச்சிறப்பாக அதிகரித்திருந்தது.
  • சாதாரணமாக ஆழமான தூக்க நிலையில் கிடைக்கக்கூடிய ஓய்வு, ஓய்வின் தரம் மற்றும் புத்துணர்வை ஷாம்பவி பயிற்சி வழங்குவதை காண முடிந்தது.

நளினி காந்தி சான்று பெற்ற மல்டி ஸ்டைல் யோகா பயிற்சியாளர். இவர் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்வதோடு பிறருக்கும் கற்றுத்தருகிறார். தினமும் அதிகாலை யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளார். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் தன நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை கற்று தருகிறார். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை கற்று தருகிறர் நளினி காந்தி. யோகா செய்பவர் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு ஆலோசனைகளையும் தருகிறார் நளினி காந்தி.

நளினி காந்தி அவர்களுடன் யோகா சார்ந்த ஆன்லைன் ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன