கடின உழைப்பால் வாழ்வில் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து வாழ்வில் நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். சிலருக்கு கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லை என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குறிப்பிட்ட திசையில் தூங்கக்கூடாது-காரணம் :
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர்கள் கூறியுள்ளனர். பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலம்.

இரவில் நீண்ட நேர விழிப்பு-தீமைகள்:
இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன் உடலில் பயம், படபடப்பு, புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். மேலும் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
ஜாதக பாவகங்கள் :
3 ,6 ,9 ,12 ம் வீடுகள் விரைய ஸ்தானம் எனும் 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தர கூடும் , மனக்கவலைகளால் உடல் நிலை சிறிது பாதிக்க கூடும் , கவனமாக இல்லாவிட்டால் தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட கூடும் , சில நேரங்களில் முன்னேறத்தை தடுக்க கூடும் , அதிக முதலீடுகளை மற்றவர்களை நம்பி செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் இல்லையெனில் அதிக இன்னல்களை சந்திக்க கூடும்.
சுக்கிரனின் அதிர்ஷ்டம் :
சுக்கிரன் எப்போதும் குறுக்கு வழியில் அதிர்ஷ்டம் தருபவர். குறுக்கு வழி என்றால் தர்மத்துக்குப் புறம்பான வழி என்று பொருளல்ல. ஒருவருக்கு எந்தத் தகுதியும், திறமையும் இல்லாமலேயே, சிறிதும் உழைக்காமலேயே வரக்கூடிய அதிர்ஷ்டம்தான் குறுக்கு வழியில் வரும் அதிர்ஷ்டம் என்பது. இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தைத் தருபவர் சுக்கிரன். ஒருவருடைய அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடும் பாவங்களாக லக்னத்துக்கு 2-ம் இடமான தனஸ்தானம், 4-ம் இடமான சுகஸ்தானம், 9-ம் இடமான பாக்கியஸ்தானம், 11-ம் இடமான லாபஸ்தானம் ஆகிய பாவங்கள் விளங்குகின்றன.

ஓரை என்பது என்ன :
பூமத்திய மற்றும் தீர்க்க ரேகையை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
16 ஆண்டுகளுக்கும் மேலாக வேத ஜோதிடத்தில் அனுபவம் கொண்டவர் ஜோதிடர் செந்தில்குமார். காதல், திருமணம், தொழில், வணிகம் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜோதிட தீர்வுகளை வழங்குகிறார். உண்மையான வேத வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களுக்கு சரியான பாதையை பின்பற்ற வழிகாட்டியுள்ளார், இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் அடைந்துள்ளனர். ஜோதிடர் செந்தில்குமார் தனது அறிவார்ந்த மற்றும் உள்ளுணர்வு திறன்களால், பல அரசியல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள மூல காரணத்தையும் செந்தில்குமார் கணித்துள்ளார்.
ஜோதிடர் செந்தில்குமார் அவர்களுடன் ஜோதிட ஆலோசனையில் ஈடுபட…
